பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு: சென்னையில் தொழில்துறையினருடன் கர்நாடக அரசு ஆலோசனை

Bengaluru Tech Summit 2026 : பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு தொடர்பாக, சென்னையில் தொழில்துறையினருடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தினார்கள்.

Published on: September 23, 2026 at 7:39 pm

சென்னை, செப். 23, 2026: ஆசியாவின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிகழ்வுகளில் ஒன்றான பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு (BTS) 2026, வரும் நவம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் (BIEC) நடைபெற உள்ளது.

இதையொட்டி, கர்நாடக அரசு சார்பில் சென்னையில் தொழில்துறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். ஏ.ஐ மற்றும் பியாண்ட் (AI & Beyond) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவு மட்டுமின்றி பல்வேறு வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

BTS 2026 நிகழ்வை கர்நாடக அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (STPI) அமைப்புடன் இணைந்து நடத்துகிறது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக நடைபெற்று வரும் இந்த உச்சிமாநாட்டின் 29-வது பதிப்பில், செயற்கை நுண்ணறிவு, டீப்டெக், மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகள், உயிரித் தொழில்நுட்பம், புத்தொழில் நிறுவனங்கள், AVGC உள்ளிட்ட துறைகளில் உலகளாவிய தலைவர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1,800-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 1,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகப் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில் ஏ.ஐ மற்றும் டீப்டெக், ஃபின்டெக், ஹெல்த் அண்ட் பயோடெக், ஸ்பேஸ்டெக், இந்தியா-அமெரிக்கா தொழில்நுட்ப மாநாடு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருட்களில் மாநாட்டு அமர்வுகள் நடைபெற உள்ளன. இதனுடன் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்கள், வட்டப் பொருளாதாரம், ஆரஞ்சுப் பொருளாதாரம் மற்றும் மின்சாரப் போக்குவரத்து போன்ற வளர்ந்து வரும் துறைகளும் கவனம் பெறுகின்றன.

பெரிய அளவிலான கண்காட்சி, முதலீட்டாளர் சந்திப்புகள், வலையமைப்பு நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளுக்கான தளங்களும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. குறிப்பாக, வளர்ந்து வரும் புத்தொழில் நிறுவனங்களை முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் ‘எதிர்கால சந்தை’ திட்டமும் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

சென்னையில் நடைபெற்ற தொழில்துறை சந்திப்பில், கர்நாடக அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் என். மஞ்சுளா, ஐ.ஏ.எஸ்., கர்நாடகாவின் தொழில்நுட்பச் சூழல் மற்றும் எதிர்கால கூட்டுறவுக்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

STPI சென்னை இயக்குநர் சுப்பிரமணியம் எஸ்.ஆர்., கர்நாடக அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை இயக்குநர் டாக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரன், BTS 2026 உயிரி தொழில்நுட்ப மாநாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் பி.எம். முரளி, ஐஐடி மெட்ராஸ் நிறுவனப் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் BTS 2026-ல் தங்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும், முக்கிய பங்குதாரர்களுடன் இணைவதற்கும் இந்தச் சந்திப்பு வாய்ப்பை ஏற்படுத்தியது.

BTS 2026-ன் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, மின்னணுவியல், குறைக்கடத்திகள் மற்றும் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் மீது கவனம் செலுத்தும் நிகழ்வின் முதல் இந்தியப் பதிப்பு, BTS உடன் ஒரே இடத்தில் நடைபெற உள்ளது. விரிவுபடுத்தப்பட்ட கண்காட்சி, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிக் குழுக்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான நிகழ்ச்சிகள், முதலீட்டாளர் சந்திப்புகள், மாநாட்டு அமர்வுகள் மற்றும் அறிவுப் பகிர்வு தளங்கள் மூலம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான சர்வதேச மையமாக கர்நாடகாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் BTS 2026 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஐ மற்றும் பியாண்ட் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவைத் தாண்டிய புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள், உலகளாவிய கூட்டாண்மைகள் மற்றும் எதிர்கால புத்தாக்கங்கள் குறித்து விவாதிக்க முக்கிய தளமாக அமைய உள்ளது.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com