Beats 360 Headphones: இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான பீட்ஸ் (Beats) நிறுவனம் புதிய பீட்ஸ் 360 ஓவர்-இயர் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Beats 360 Headphones: இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான பீட்ஸ் (Beats) நிறுவனம் புதிய பீட்ஸ் 360 ஓவர்-இயர் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: September 23, 2026 at 1:43 pm
சென்னை, செப்.23, 2026: இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான பீட்ஸ் (Beats) நிறுவனம் புதிய பீட்ஸ் 360 ஓவர்-இயர் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணம், அலுவலகப் பயன்பாடு, தினசரி பயணம் மற்றும் உடற்பயிற்சி என பல்வேறு சூழல்களிலும் பயன்படுத்தும் வகையில் இந்த ஹெட்போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆக்டிவ் நாய்ஸ் நீக்கம் (Active Noise Cancellation – ANC), மாற்றிக்கொள்ளக்கூடிய குஷன்கள் மற்றும் வியர்வை, நீர் எதிர்ப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
பீட்ஸ் 360 ஹெட்போன்களின் இந்திய விலை ரூ.42,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு, கிளவுட், பிங்க் மற்றும் ஸ்கை ஆகிய நான்கு வண்ணங்களில் இது கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ண மாடலிலும் அதற்கேற்ற நிறத்தில் இயர் கப் மற்றும் ஹெட்பேண்ட் குஷன்கள் வழங்கப்படுகின்றன. தேவைக்கேற்ப குஷன்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹெட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று IPX4 தர நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு வசதியாகும். பீட்ஸ் நிறுவனத்தின் ஓவர்-இயர் ஹெட்போன் மாடல்களில் இந்த வசதியுடன் வெளியாகும் முதல் மாடலாக பீட்ஸ் 360 அறிமுகமாகியுள்ளது. இதனால் உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பயன்பாடுகளுக்கும் இது ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் ஹெட்போன்களை மடித்து வைக்க முடியும்.
பேட்டரி திறனைப் பொறுத்தவரை, ஏ.என்.சி மற்றும் பெர்ஷனலைஸ்டு ஸ்பெடியால் ஆடியோ ஆகிய வசதிகள் இயக்கப்பட்ட நிலையிலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த ஹெட்போன்களை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் சுமார் ஒரு மணி நேரம் வரை இசையை இயக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேர பயணம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு பேட்டரி வசதி முக்கிய அம்சமாக உள்ளது.
ஆப்பில் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுடன் ஆண்ட்ராய்டு பயனர்களையும் கருத்தில் கொண்டு பீட்ஸ் 360 உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.என்.சி, பெர்ஷனலைஸ்டு ஸ்பெடியால் ஆடியோ, IPX4 பாதுகாப்பு, மாற்றக்கூடிய குஷன்கள் மற்றும் நீண்ட பேட்டரி பேக்கப் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஹெட்போன், இந்தியாவில் பிரீமியம் விலைப் பிரிவில் அறிமுகமாகியுள்ளது. ரூ.42,900 விலையில் நான்கு வண்ணத் தேர்வுகளுடன் கிடைக்கும் பீட்ஸ் 360, பல்வேறு பயன்பாடுகளுக்கான ஒரே ஹெட்போனை விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
விலை என்ன?
பீட்ஸ் 360 ஹெட்போன்களுக்கான தனித்தனி கிட்-ஐ ₹6,900-க்கு நிறுவனம் விற்பனை செய்கிறது. பெர்பாமென்ஸ் நைட் வகையில் ப்ளாக், கிளவுட், பிங், ஸ்கை, நேவி, வோல்ட் ஆகிய நிறங்களிலும், அல்ட்ரா ப்ளஸ் வகையில் ப்ளாக் மற்றும் கிளவுட் நிறங்களிலும் கிடைக்கின்றன. இந்த ஹெட்போன்களை ஆப்பிள் இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம். கடைகள் மற்றும் நேரடி விற்பனை நிலையங்களில் செப்டம்பர் 24 முதல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஓடியாங்க, ஓடியாங்க.. தங்கம் விலையில் அதிரடி சரிவு.. இன்றைய நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com