Dindigul Protest: தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Dindigul Protest: தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Published on: August 11, 2026 at 4:35 pm
திண்டுக்கல், ஆக.11, 2026: திண்டுக்கல் மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1950 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆணையின் மூலம் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி உரிமை மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, ஆகஸ்ட் 10 ஆம் தேதியை ‘கருப்பு தினம்’ எனக் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புனித வளனார் பேராலயத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்தும் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆயர் தாமஸ் பால்சாமி, “1950-இல் எஸ்சி பட்டியல் இந்துக்களுக்கு மட்டுமே என வரையறுக்கப்பட்டது. பின்னர் சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு விரிவாக்கப்பட்ட போதிலும், தலித் கிறிஸ்தவர்களுக்கும், தலித் இஸ்லாமியர்களுக்கும் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதையும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்றார்.
அவர் மேலும், இடைக்கால நிவாரணமாக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தலித் கிறிஸ்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்பிசி பிரிவில் உரிய இடம் வழங்கவும், சிறுபான்மையினக் கல்வி நிறுவனங்களுக்கு முழுமையான அரசு நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்தார். “சாதி, மத பாகுபாடின்றி சேவை செய்து வரும் தலித் கிறிஸ்தவர்களின் 75 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்.. மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவா? ஐகோர்ட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com