பெங்களூரு, மே 28, 2026: கர்நாடக மாநிலத்தில் அரசியல் பரபரப்பு உச்சத்தில் உள்ளது. மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா இன்று (வியாழக்கிழமை) காலை தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் காலை ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் மதியம் ஆளுநரிடம் ராஜினாமா அளிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் இடத்தை துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஏற்க வாய்ப்பு அதிகம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சித்த ராமையா ராஜினாமா
இன்று காலை 9 மணிக்கு சித்தராமையா தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உடன் காலை உணவு கூட்டம் நடத்துகிறார்.
தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்குப் பிறகு ஆளுநர் தாவர்சந்த் கெஹ்லோட் அவர்களிடம் ராஜினாமா அளிக்க சித்த ராமையா முடிவு செய்துள்ளார்.
புதிய முதல்வர் யார்?
இந்நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பதவியேற்கும் வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.
பின்னணி என்ன?
2023 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சித்த ராமையா- டி.கே. சிவக்குமார் இடையே “2.5 வருடங்கள் – 2.5 வருடங்கள்” என்ற அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் டெல்லி மேலிடம் சித்த ராமையாவுக்கு ராஜ்யசபா இடம் மற்றும் தேசிய அளவிலான பங்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் மாநிலத்தில் ஆங்காங்கே தற்போதே டி.கே. சிவக்குமார் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க : த.வெ.க.வில் இணையும் இசக்கி சுப்பையா? அடுத்த விக்கெட் காலி? பரபரக்கும் தமிழக அரசியல்
Karnataka SIR Voter List Row: கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய வாக்காளர்களின்…
Cauvery Water Row : தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா…
Siddaramaiah 75% reservation proposal: பெங்களூருவில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பேசிய அவர், “இது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; சமூக சமநிலையை நிலைநிறுத்தும் அவசியமான…
Mekedatu Dam : மேகதாதுவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 67.14 டி.எம்.சி கொள்ளளவில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை…
Karnataka Polls Minus Siddaramaiah : 2028 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்….
CM Vijay Prays at Kollur Temple: முதலமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடு நடத்தினார்….