Karuppu Twist : கருப்பு படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது என ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார்.
Karuppu Twist : கருப்பு படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது என ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார்.

Published on: May 28, 2026 at 11:19 am
சென்னை, மே 28, 2026: சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் 8 நாட்களில் ₹250 கோடி வசூலித்து 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய தமிழ் வெற்றிப் படமாக உயர்ந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி, இந்த படம் முதலில் விஜய்க்காக எழுதப்பட்டதாகவும், அவர் அரசியலுக்கு செல்லும் முன் கடைசி படமாக இருக்க வேண்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
மே 15ஆம் தேதி தியேட்டரில் வெளியான கருப்பு படம் இதுவரை ரூ.235 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மீதான நேர்மறை விமர்சனங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ஆர்.ஜே பாலாஜி பேட்டி
இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி, இந்த படம் விஜயின் கடைசி படம் ஆக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்; பல சந்திப்புகளில், அவரது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், விஜய் விலகியதால், சூர்யாவிடம் கதை சொன்னேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், “சூர்யா கதை கேட்டு, திரைக்கதை மாற்றங்களை பரிந்துரைத்தார், அதுவே இறுதி வடிவத்தை பெற்றது” எனவும் ஆர்.ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில், சூர்யா, த்ரிஷா கிருஷ்ணன், ஆர்.ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி சுப்ரமணியம், சுவாசிகா, சிவதா, சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே 10, 2026ல் விஜய் முதலமைச்சராக பொறுப்பெற்றுக் கொண்டார். அவரின் கடைசிப் படமாக ஜனநாயகன் கருதப்படுகிறது.
இதையும் படிங்க : சமந்தாவுக்கு பூங்கொடுத்து கொடுத்த ரசிகர்.. வீடியோ வைரல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com