சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.. நவம்பர் 6-ல் படம் ரிலீஸ்!

Suriya’s Seenu: சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது; படம் நவம்பர் 6-ல் ரிலீஸாகிறது.

Published on: October 30, 2026 at 1:45 pm

சென்னை, அக்.30, 2026: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்திற்கு சென்னை மண்டல தணிக்கை வாரியம் யு/ஏ (U/A 16+) சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, வரும் நவம்பர் 6ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 29 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் கிரைம் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், சூர்யா காவல் அதிகாரி இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்படாமல் விடப்பட்ட ஒரு வழக்கை, சிக்கலான குழுவினருடன் இணைந்து அவர் மீண்டும் விசாரிப்பதே படத்தின் கதைக்களமாகும்.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், மலையாள இளம் நடிகர் நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஆனந்தராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களது 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் ஜாகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இப்படத்தை, தமிழகத்தில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது. தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள ‘சீன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : ‘அக்கா’ வெப் தொடரில் ராதிகா ஆப்தேவின் தோற்றம்.. ஜீனத் அமன் கொடுத்த இன்ஸ்பிரேஷன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com