கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

5 நாள் அரசுமுறை பயணம்.. ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி.. முழுவிவரம் Narendra Modi

5 நாள் அரசுமுறை பயணம்.. ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி.. முழுவிவரம்

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 15 முதல் 5 நாள் அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே,…

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வாக்காளர் திருத்தம் காரணம்.. மம்தா பானர்ஜி West Bengal

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வாக்காளர் திருத்தம் காரணம்.. மம்தா பானர்ஜி

West Bengal : மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி…

ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள் Narendra Modi

ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்

Narendra Modi : நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்….

கேரளத்தில் யார் முதலமைச்சர்? வெற்றியை களங்கப்படுத்துவதா? ராகுல் காந்தி ஆவேசம்! Congress Delays Kerala CM Decision

கேரளத்தில் யார் முதலமைச்சர்? வெற்றியை களங்கப்படுத்துவதா? ராகுல் காந்தி ஆவேசம்!

Kerala CM Decision : கேரளத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது….

ஜன கன மன போல் வந்தே மாதரம் பாடலுக்கு அங்கீகாரம்.. அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு Asaduddin Owaisi

ஜன கன மன போல் வந்தே மாதரம் பாடலுக்கு அங்கீகாரம்.. அசாதுதீன் ஓவைசி

Asaduddin Owaisi : சட்டரீதியான பாதுகாப்பை ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை, அசாதுதீன் ஒவைசி எதிர்த்துள்ளார்….

பாலியல் வன்கொடுமை.. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! Crimes against Women

பாலியல் வன்கொடுமை.. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

Crimes against Women: டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com