Maharashtra Election | மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பகுஜன் விகாஸ் அகாதிக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
Maharashtra Election | மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பகுஜன் விகாஸ் அகாதிக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
Published on: November 4, 2024 at 11:29 pm
Maharashtra Election | ஹிதேந்திரா தாக்கூர் தலைமையிலான பகுஜன் விகாஸ் அகாதிக்கு (பிவிஏ) வரும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) திங்கள்கிழமை (நவ. 4, 2024) மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த ஆண்டு ஜனவரியில், மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல் ஆகிய இரண்டிற்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் பகுஜன் விகாஸ் அகாதி கோரிக்கை விடுத்து இருந்தது.
ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டது. இந்த நிலையில், பகுஜன் விகாஸ் அகாதி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ரிட் மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அக்ஷய் ஷிண்டே, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற ஐக்கிய ஜனதா தளம் JD(U) கட்சியிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அப்போது, “ஜே.டி.(யு) விசில் சின்னத்தை ஒப்படைத்ததாகவும், அதை உறுதிப்படுத்தும் கடிதம் அக்டோபர் 30 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு வந்தது என்றும் ஷிண்டே கூறினார். இதனால், தேதியிடப்பட்ட உத்தரவின் அடிப்படையில் அக்கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட ‘விசில்’ சின்னத்தை ஒப்படைக்கிறது” என்றார்.
இதையடுத்து, வழிகாட்டுதலின்படி பகுஜன் விகாஸ் அகாதி கட்சி ‘விசில்’ சின்னத்திற்கு விண்ணப்பித்ததால், அது கட்சிக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க மகாராஷ்டிரா தேர்தல்; டி.ஜி.பி ராஷ்மி இடமாற்றம்: என்ன காரணம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com