Hezbollah commander killed | இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டார்.
Hezbollah commander killed | இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டார்.
Published on: November 4, 2024 at 11:11 pm
Hezbollah commander killed | இஸ்ரேலிய இராணுவம் திங்களன்று (நவம்பர் 4, 2024) தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, “தெற்கு லெபனானில் உள்ள பராச்சிட் பகுதியின் ஹிஸ்புல்லா தளபதி அபு அலி ரிடா ராக்கெட் வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிடா ராணுவ துருப்புகள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். அப்பகுதியில் ஹெஸ்புல்லா செயல்பாட்டாளர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திவருகிறது.
சமீபத்திய வாரங்களில், முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட இயக்கத்தின் பல போராளித் தளபதிகள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பாலஸ்தீனிய போராளிக் குழு தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸூ்க்கு எதிராகவும் இஸ்ரேல் போர் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் ; 24 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com