Israeli Airstrikes | வெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
Israeli Airstrikes | வெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
Published on: November 1, 2024 at 1:17 pm
Israeli Airstrikes | இஸ்ரேலிய ராணுவம் ஹிஸ்புல்லாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, செப்டம்பர் 23ம் தேதி முதல், இஸ்ரேல் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும், 19 பேர் காயமடைந்தனர் என லெபனான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து, கிழக்குப் பகுதியில் இருந்து லெபனானின் மையப்பகுதிக்கு முன்னேற முயற்சிக்கும் ஹிஸ்புல்லாவுக்கும், இஸ்ரேலிய ராணுவத்துக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல்கள் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் 8, 2023 அன்று போர் தொடங்கியதில் இருந்து, லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க அமெரிக்க அதிபர் தேர்தல்; இவருக்குத்தான் நிச்சய வெற்றி: உலகின் சிறந்த பொருளாதார நிபுணர் கணிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com