Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்….
Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்….
Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்…
Jaipur: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைதுசெய்தனர்….
Cheating case against Shaadidotcom: ஷாதி.காம் (Shaadi.com) நிறுவனத்தின் பயனர் ஒருவர், திருமண வலைத்தளம் மூலம் சந்தித்த ஒருவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம்…
Urine eye wash: யூரின் மூலம் கண்களை சுத்தப்படுத்திய பெண்ணின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்