Canada | கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Canada | கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: November 4, 2024 at 10:42 am
Updated on: November 4, 2024 at 10:44 am
Canada | இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இன்று பிராம்ப்டனில் உள்ள இந்து சபா மந்திரில் நடந்த வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒவ்வொரு கனடியர்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. சமூகத்தைப் பாதுகாக்கவும், இந்தச் சம்பவத்தை விசாரிக்கவும் விரைவாகப் பதிலளித்த காவல் துறைக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கெவின் வூங் தனது கவலைகளை வெளிப்படுத்தினார், கனடா தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறி வருவதாக எச்சரித்தார். இந்து சமூகத்தை பாதுகாப்பதில் நாட்டின் தலைமை தவறிவிட்டதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், இந்திய வம்சாவளி கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா, பிராம்டனில் உள்ள இந்து கோவில் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவில் இந்துக்கள் மீது அடிக்கடி நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க அமெரிக்க அதிபர் தேர்தல்; இவருக்குத்தான் நிச்சய வெற்றி: உலகின் சிறந்த பொருளாதார நிபுணர் கணிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com