Chennai | சென்னையில் பட்டியலின சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
Chennai | சென்னையில் பட்டியலின சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
Published on: November 4, 2024 at 10:31 am
Chennai | தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது தலித் சிறுமி, மேற்கு சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு இஸ்லாமிய தம்பதியின் வீட்டின் குளியலறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த வீட்டில் அவர் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்தார் என்று கிரேட்டர் சென்னை காவல்துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
இந்நிலையில், இஸ்லாமிய தம்பதியர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியின் உடலில் சிகரெட்டால் சுட்ட தீக்காயங்கள் காணப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய நிலவரப்படி, பாலியல் வன்கொடுமை இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு (எஸ்சி/எஸ்டி பிஓஏ) கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட பட்டியலின சிறுமி, சென்னையில் முகமது நிஷாத் (36) மற்றும் அவரது மனைவி நஸ்ரியா வீட்டில் வேலை பார்த்து வந்தார். நிஷாத் நகரில் யூஸ்டு கார் டீலராக இருந்துள்ளார். சிறுமி, குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் வீட்டு வேலை செய்து வந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வது குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறுமி நவ.1ஆம் தேதி கொல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் உடலை அப்படியே விட்டுவிட்டு முகமது நிஷாத்- நஸ்ரியா தம்பதியர் அங்கிருந்து தனது நண்பர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை மையம் அலர்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com