Mythology | வனவாசத்தின் போது ஸ்ரீ ராமபிரான் தன்னுடன் எடுத்துச் சென்றது எது என்று தெரியுமா?
Mythology | வனவாசத்தின் போது ஸ்ரீ ராமபிரான் தன்னுடன் எடுத்துச் சென்றது எது என்று தெரியுமா?
Published on: November 4, 2024 at 10:56 am
Mythology | இறைவனே இப்பூ உலகில் அவதாரம் செய்து யுகம் தோறும் யுகம் மனித ரூபத்தில் தோன்றி மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று திருவிளையாடல் புரிந்துள்ளனர். அந்த வகையில் மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ ராமர் அவதாரத்தில் சீதா தேவியை திருமணம் செய்து அயோத்திக்கு திரும்பிய ராமபிரானை நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்த்தி விதவிதமாக உயர்ந்த பரிசுகள் வழங்கி வரவேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்து தைத்தது போன்ற இரண்டு பாதுகைகள் இருந்தன. மித்ரபந்திடம் பணம் ஏதும் இல்லாததால் ராமபிரானுக்கு அழகிய செருப்பு தைத்து கொண்டு வந்திருந்தான். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ராமபிரானை வாழ்த்தி வரிசையாக பரிசு பொருள்களை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காலணிகையா கொடுப்பது என்று நினைத்தவன் ராமனை பார்க்காமல் திரும்ப சென்று விடலாம் என்று நினைத்து திரும்பினான். அதை கவனித்த ராமபிரான் அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உண்டான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்கு பிரியமானதும் இதுவே என்று ராமர் சொன்னதும் ராமனின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனான் மித்ரபந்து.
வனவாசம் செல்லும் நேரம் வந்தது. வனவாசத்தின் போது தன்னுடன் எதையுமே எடுத்து செல்லக்கூடாது இருப்பினும் ராமர் வனவாசத்தின் போது இந்த காலணிகளை தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதி பெற்று எடுத்துச் சென்றார். வனவாசம் செல்ல கிளம்பிக்கொண்டிருந்த ராமனைப் பார்த்து மக்கள் கூட்டமாக கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த மித்ரபந்துவை நோக்கி ராமர் விலை உயர்ந்த எந்த பரிசும் எனக்கு பயன்படவில்லை. நீ கொடுத்த காலணிகள் மட்டுமே என் கால்களை காக்க போகிறது என்றார். உண்மை அன்பின் அடையாளமான அந்த பாதுகைகள் பின்னர் பரதனால் கொண்டு செல்லப்பட்டு அயோத்தியின் அரியணையில் இருந்து 14 ஆண்டுகள் ஆட்சியும் செய்தது.
இதையும் படிங்க : சீதா தேவியின் கால் தடம்; கம்பீரமாக நிற்கும் வீரபத்திரர் கோவில்: எங்கே இருக்கு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com