Israeli PM Netanyahu | அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் 30 நிமிடம் பேசினார்.
Israeli PM Netanyahu | அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் 30 நிமிடம் பேசினார்.
Published on: October 10, 2024 at 12:33 pm
Israeli PM Netanyahu | அக்.1-ல் நடந்த ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் பிரதமரும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் 30 நிமிடங்கள் தொலை பேசியில் பேசியுள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை உள்ளது, அதற்கு அமெரிக்கா உதவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல் நிகழும் போது பொதுமக்களின் உயிரிழப்பை குறைக்கவேண்டும் என இஸ்ரேலிடம் பைடன் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேசியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், “ஈரானின் எண்ணெய் கிணறுகள், அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் எனவும் பைடன் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் நீள்கின்றன. இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் போரில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீச்சு; அடுத்தடுத்து விழுந்த குண்டுமழை: இஸ்ரேலியர்கள் நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com