வாஷிங்டன், பிப்.2, 2026: உலக சுகாதார அமைப்பின் தலைவர், நிபா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய பாதிப்புகள் இந்தியாவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மற்ற எந்த நாட்டிலும் இதுவரை பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசஸ் சனிக்கிழமை (ஜன.31, 2026) கூறுகையில், ““நிபா வைரஸ் சம்பவங்கள் அரிதானவை, ஆனால் மிகவும் தீவிரமானவை” என்று எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, “இந்தியாவில் மேற்குவங்கத்தில் பதிவான இரண்டு நிப்பா வைரஸ் தொற்று சம்பவங்கள், 1998-இல் வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து இந்த மாநிலத்தில் பதிவான மூன்றாவது சம்பவமாகும்” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “இந்திய அதிகாரிகள் 190-க்கும் மேற்பட்ட தொடர்புகளை கண்காணித்து வருகின்றனர், இதுவரை யாருக்கும் நோய் உருவாகவில்லை.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அதிகாரிகள் நோய் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர். சுகாதார அமைப்புகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தொடர்ந்து தகவல் வழங்கி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அமெரிக்க அதிபருக்கே இந்நிலையா? விமானத்துக்கு என்னப்பா ஆச்சு? பரபரப்பு!
Rohit Sharma: 2027 உலக கோப்பையில் ரோஹித் சர்மா இடம் பெறுவார் என்றும் அவருக்கு ஆதரவாக பி.சி.சி.ஐ உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன….
Tour de France Femmes : `இந்திய சைக்கிள் வீராங்கனை ஹர்ஷிதா ஜாகர், பெண்களுக்கான டூர் டி பிரான்ஸ் பெண்கள் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய பெண்…
Abhishek Sharma: ஜிம்பாப்வே தொடரில் தடுமாறிய பிறகு, அபிஷேக் சர்மா உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்….
Hardik Pandya: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. அவர் எந்த அணியை தேர்ந்தெடுக்கலாம்?…
Auqib Nabi: ஜஸ்பிரித் பும்ரா இடது முழங்கால் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது….
Moeen Ali: இங்கிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டரான மொயீன் அலி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவை கிரிக்கெட் மூளை எனப் புகழ்ந்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்