தீவிரப் புயலாக வலுப்பெற்ற முரசு.. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

Cyclone Update: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை படிப்படியாகக் குறைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. பாரிமுனையில் அதிகபட்சமாக 149.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Published on: November 2, 2026 at 12:48 pm

Updated on: November 2, 2026 at 12:50 pm

சென்னை, நவ. 2 2026: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னையில் பெய்த கனமழையால் திங்கள்கிழமை (நவம்பர் 2) காலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நவம்பர் 2ஆம் தேதி காலை 8.30 மணியளவில் புயல் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது சென்னைக்கு வடகிழக்கே சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

முரசு புயல் வடமேற்கு திசையில் மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் நவம்பர் 2ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை வரை, ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் – நரசபூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 120 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட 24 மணி நேர மழைப்பதிவு அறிக்கையின்படி, நவம்பர் 2ஆம் தேதி காலை 6 மணி வரையிலான நிலவரத்தில் பாரிமுனையில் அதிகபட்சமாக 149.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நியூ மணலி டவுனில் 141.6 மி.மீ., மணலியில் 136.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாநகரின் 5 இடங்களில் மிகக் கனமழையும், 28 இடங்களில் கனமழையும், 25 இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.

சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலும் நிவாரணம் மற்றும் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை அகற்றவும், அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்கவும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னைக் கடற்கரைப் பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்பட்ட நிலையில், கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 2ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்.. சென்னை ஐகோர்ட்டில் மனு!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு!
Rain Alert

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com