Local Body Election: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Local Body Election: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: November 1, 2026 at 6:09 pm
சென்னை, நவ.1, 2026: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டுப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அரசு அதிகாரிகள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 28 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஐந்தாண்டு பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மீதமுள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 19ஆம் தேதியுடன் பதவிக்காலம் நிறைவடைந்தது. இருப்பினும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், அரசியல் சாசன விதிகளின்படி ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டுப் பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும், மாநில தேர்தல் ஆணையம் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 சிறப்பு நீதிமன்றங்கள்.. முதல்வர் விஜய் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com