Nainar Nagendran: தமிழக முதலமைச்சர் விஜய், கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருவதிலிருந்து தோல்வி குறித்த அச்சம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran: தமிழக முதலமைச்சர் விஜய், கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருவதிலிருந்து தோல்வி குறித்த அச்சம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Published on: October 5, 2026 at 11:28 am
சென்னை, அக்.5, 2026: பிரதமர் மோடி தலைமையில் பாஜக இருக்கும் வரை, எதிர்க்கட்சிகள் எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் விஜய் 5 இடங்களுக்கு மட்டுமே சென்றதாகவும், தற்போது கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருவதிலிருந்து தோல்வி குறித்த அச்சம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என்றும் அவர் விமர்சித்தார்.
விஜய் தலைமையிலான தவெக, வாக்குக்கு ரூ.6,000 வரை பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், பிற மாவட்டங்களில் இருந்து மக்கள் அழைத்து வரப்படுவதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். மேலும், திமுக மற்றும் பாஜக குறித்து விஜய் தெரிவித்த கருத்துகளை விமர்சித்த அவர், பேச்சின்போது திமுகவுக்கு பதிலாக தவெக என்று விஜய் மாற்றிக் கூறியதாகவும், தமிழகத்தில் விஜய் ஆட்சியின் கீழ் இதுபோன்ற விஷயங்கள்தான் “பளிச்சிடுகின்றன” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : இளையராஜா இசை மையம் திறப்பு.. அக்.11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com