எட்டயப்புரம் அருகே பரபரப்பு.. பட்டாசு ஆலைக்கு சீல்!

Illegal Firecracker Stockpile: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மாசார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை ஒன்றில் அனுமதி இன்றி அதிகளவு பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Published on: October 5, 2026 at 11:44 am

தூத்துக்குடி, அக்.5, 2026: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மாசார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த TESCO பட்டாசு உற்பத்தி ஆலையில், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO), தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, தொழிற்சாலை வளாகத்தில் இருந்த இரண்டு கன்டெய்னர்களிலும் ஒரு கட்டிடத்திலும் அனுமதியின்றி பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கந்தகத்தின் அளவிலும் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விதிமீறல்கள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

எட்டயபுரம் வட்டாட்சியர் ஜெயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் குழு, தொழிற்சாலை வளாகத்தில் இருந்த இரண்டு கன்டெய்னர் லாரிகள், அனுமதியின்றி அமைக்கப்பட்ட 60 அடி நீளம் மற்றும் 24 அடி அகலம் கொண்ட கட்டிடம், ஷோரூம் மற்றும் கந்தக அறை ஆகியவற்றை தனித்தனியாக சீல் வைத்தனர். பின்னர், பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை முழுவதும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

TESCO பட்டாசு தொழிற்சாலை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பட்டாசுகள் சேமித்து வைத்திருந்ததாகவும், உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கந்தகத்தின் அளவில் வேறுபாடு இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் ஆய்வு மற்றும் நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : கிராமம் கிராமமாக செல்லும் விஜய்.. தோல்வி பயம் காரணமா? நயினார் நாகேந்திரன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com