தி.மு.க. தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும்.. அமைச்சர் ரமேஷ்

S. Ramesh: தி.மு.க. தலைவர்கள் பொதுவெளியில் பேசும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

Published on: October 3, 2026 at 12:57 pm

திருச்சி, அக்.3, 2026: திருச்சியில் மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் த.வெ.க. அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் த.வெ.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வரவுள்ள இடைத்தேர்தல்களில் த.வெ.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் ரமேஷ் கூறினார். வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார். அரசின் நலத்திட்டங்களே மக்களிடம் ஆதரவை பெற்றுத் தரும் என்றும், எனவே வாக்குகளுக்காக பணம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தி.மு.க. தலைவர்கள் பொதுவெளியில் பேசும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும், ஸ்ரீரங்கம் கோவில் நிலம் தொடர்பான விவகாரத்தில் தி.மு.க. நிர்வாகி ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படும் புதுச்சேரி ஓய்வுபெற்ற நீதிபதியும் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தேர்தல் ஆணைய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான த.வெ.க.வின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டபோது, அதுகுறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்வார் என ரமேஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க : வெற்றிப் பயணத் திட்டம்.. பெண்கள் எவ்வளவு தூரம் கட்டணம் இன்றி பயணிக்கலாம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com