Ranbir Defends Ramayana Role : ‘ராமர் கதாபாத்திரத்துக்கு சரியான நடிகர் இல்லை’ என நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். இது அவர் மீதான ராமர் கதாபாத்திர தேர்வு விமர்சனங்களுக்கு பதிலாக பார்க்கப்படுகிறது.
Ranbir Defends Ramayana Role : ‘ராமர் கதாபாத்திரத்துக்கு சரியான நடிகர் இல்லை’ என நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். இது அவர் மீதான ராமர் கதாபாத்திர தேர்வு விமர்சனங்களுக்கு பதிலாக பார்க்கப்படுகிறது.

Published on: July 28, 2026 at 1:13 pm
மும்பை, ஜூலை 28, 2026: நிதேஷ் திவாரியின் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராமர் வேடத்தில் நடித்தது குறித்த விமர்சனங்களுக்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பதிலளித்துள்ளார். படத்தின் முதல் டீசர் வெளியானதிலிருந்து, சமூக வலைதளங்களில் அவரது தேர்வு குறித்து பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்தன. சிலர் அவர் ராமர் வேடத்திற்கு சரியான தேர்வு அல்ல என்று கூறிய நிலையில், ரன்பீர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
சான் டியாகோ காமிக்-கானில் நடந்த விளம்பர நிகழ்வில் பேசிய ரன்பீர், முதலில் இந்த வேடம் வழங்கப்பட்டபோது தன்னிடம் சந்தேகங்கள் இருந்ததாக ஒப்புக்கொண்டார். “நான் தகுதியானவனா? நான் சரியான நபரா? ராமராக நடிக்காமல், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பு எனக்கு ஏன் வழங்கப்படுகிறது?” என்ற கேள்விகள் மனதில் தோன்றியதாக அவர் கூறினார்.
அவர், ராமர் பாத்திரத்திற்கு ஒரே ஒரு சரியான நடிகர் இருக்க முடியாது என்றும், ஒவ்வொருவருக்கும் ராமர் குறித்த தனிப்பட்ட புரிதல் இருப்பதால் வெவ்வேறு கருத்துக்கள் இயல்பாகவே உருவாகும் என்றும் விளக்கினார். “சிலர் நான் பொருத்தமற்றவன் என்று நினைக்கலாம், சிலர் சரியான தேர்வு என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில், ராமரின் பயணத்தின் மீது நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட எந்த நடிகரும்தான் பொருத்தமானவர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ராமாயணத்தின் கதையை 4,000 ஆண்டுகளாக மக்கள் மனதில் பதிந்திருப்பதாகவும், அதை திரைப்படமாக வழங்குவதில் தயாரிப்பாளர்களின் நோக்கம் மிக முக்கியமானது என்றும் ரன்பீர் வலியுறுத்தினார். “ராமர் பாத்திரத்தில் நடிக்க ஒரு சரியான நடிகர் இருக்கவே முடியாது” என்று அவர் உறுதியாகக் கூறினார்.
‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் காட்சியமைப்பும், ராமர் வேடத்தில் ரன்பீரின் தோற்றமும், வெளியீட்டிற்கு முன்பே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : விஜயின் ஜனநாயகன் பாக்ஸ்ஆபிஸ் வசூலில் எப்படி? திங்கள்கிழமை நிலவரம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com