3 முறை காதலை சொன்ன சைஃப் அலிகான்.. கரீனா கபூர் பதில் என்ன தெரியுமா?

Kareena-Saif Love Story: பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான கரீனா கபூர் மற்றும் சைஃப் அலிகான் தங்களது காதல் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளனர்.

Published on: October 21, 2026 at 1:09 pm

மும்பை, அக்.21, 2026: பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான கரீனா கபூர் மற்றும் சைஃப் அலிகான் தங்களது காதல் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளனர். கபில் சர்மா தொகுத்து வழங்கும் ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்ற கரீனா, சைஃப் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மூன்று முறை விருப்பம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

முதலில் மும்பையிலும், பின்னர் கிரீஸ் நாட்டிலும் சைஃப் திருமணக் கோரிக்கை வைத்ததாக கரீனா தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இரு முறையும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதியாக பாரிஸ் நகரில் சைஃப் மீண்டும் திருமணக் கோரிக்கை வைத்தபோதுதான் கரீனா சம்மதம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட சைஃப் அலிகான் நகைச்சுவையாக, “மும்பையிலேயே நீ சம்மதம் சொல்லியிருந்தால் நிறைய பணத்தை மிச்சப்படுத்தியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதில் நிகழ்ச்சியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்தச் சுவாரசியமான காதல் நினைவுகள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் இருவரும் 2007-ஆம் ஆண்டு ‘டஷன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டது. பல ஆண்டுகள் காதலித்த இவர்கள், 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களுக்கு தைமூர் அலிகான், ஜெஹ் அலிகான் என இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் தங்களது 14-வது திருமண நாளையும் கொண்டாடினர்.

இதையும் படிங்க : காதலுக்கு உதவும் ‘AI விங்மேன்’.. டெல்லி, மும்பை இளைஞர்களிடம் அதிகரிக்கும் பயன்பாடு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com