AI Wingman Dating Trend: ‘AI விங்மேன்’ காதலுக்கு உதவுவதாகவும், டெல்லி, மும்பை இளைஞர்களிடம் இதன் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
AI Wingman Dating Trend: ‘AI விங்மேன்’ காதலுக்கு உதவுவதாகவும், டெல்லி, மும்பை இளைஞர்களிடம் இதன் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Published on: October 20, 2026 at 2:57 pm
சென்னை, அக்.20, 2026: காதல் மற்றும் டேட்டிங் விவகாரங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நியூஸ்18 வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியைச் சேர்ந்தவர்களில் 55 சதவீதத்தினரும், மும்பையைச் சேர்ந்தவர்களில் 49 சதவீதத்தினரும் தங்களின் காதல் உரையாடல்களையும், கவரும் வகையில் பேசும் திறனையும் மேம்படுத்த செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
பிரபல கிளிடென் ஐபிசோஸ் (Gleeden–Ipsos) நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். காதல் உறவுகளில் உரையாடலை எவ்வாறு தொடங்குவது, எதிரில் இருப்பவரைக் கவரும் வகையில் எப்படிப் பேசுவது, தங்களது உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்துவது போன்றவற்றுக்கு ஏ.ஐ உதவியை நாடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும், டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்தவர்களில் 46 சதவீதத்தினர் தங்களது டேட்டிங் சுயவிவரங்களை மேம்படுத்தவும் ஏ.ஐ-யை பயன்படுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் தங்களைச் சிறப்பாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமும் அதிகமாக உள்ளது. டெல்லியில் 75 சதவீதத்தினரும், மும்பையில் 72 சதவீதத்தினரும் சமூக வலைதளங்களில் தங்களை முழுமையானவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அழுத்தத்தை உணர்வதாகக் கூறியுள்ளனர்.
அதேவேளையில், காதல் உறவுகளில் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது நம்பகத்தன்மை மற்றும் நேர்மை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 54 சதவீதத்தினர், சமூக வலைதளங்களில் பிறருடன் ஊர்சுற்றும் வகையிலான உரையாடல்களைச் செய்வதை, உறவில் துரோகம் செய்வதற்கு ஒப்பானதாகக் கருதுகின்றனர். AI உரையாடலுக்கு உதவியாக இருந்தாலும், உண்மையான உறவுகளுக்கு நேர்மை, நம்பிக்கை மற்றும் இயல்பான உணர்வுப் பரிமாற்றமே அடிப்படை என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க : இளம் வயதினருக்கும் முதுகுத்தண்டு பாதிப்பு.. மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com