ரன்வீர்- தீபிகா இரண்டாவது மகள் பெயர் தெரியுமா?

Devi Padukone Singh’s Name Reveal: நடிகர் ரன்வீர்- தீபிகா தம்பதி தனது இரண்டாவது மகளுக்கு ‘தேவி படுகோன் சிங்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

Published on: October 21, 2026 at 12:13 pm

மும்பை, அக்.21, 2026: பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், தங்களது இரண்டாவது பெண் குழந்தைக்கு ‘தேவி படுகோன் சிங்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். விஜயதசமி தினமான அக்டோபர் 20-ஆம் தேதி, தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனுடன், தங்களது குடும்பப் புகைப்படத்தையும் இருவரும் பகிர்ந்துள்ளனர். அதில் தீபிகா, ரன்வீர் மற்றும் அவர்களது மூத்த மகள் துவா ஆகியோருடன் புதிதாகப் பிறந்த குழந்தையும் இடம்பெற்றுள்ளது. பாரம்பரிய உடைகளில் காட்சியளிக்கும் குடும்பத்தினரின் இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, மூத்த மகள் துவா தனது தங்கையான தேவிக்கு அன்புடன் முத்தமிடும் காட்சி புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்துடன், “Of Love & Abundance” என்ற வாசகத்தையும் தம்பதியினர் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த செப்டம்பர் 19, 2026 அன்று இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இவர்களது முதல் மகள் துவா, 2024 செப்டம்பர் 8-ஆம் தேதி பிறந்தார். தற்போது இரண்டாவது மகளின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளதால், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 56 வயதில் மாரடைப்பு.. நடிகை சித்ராவின் நிறைவேறாத இரண்டு கனவுகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com