Yemen Houthi Missile Attack: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
Yemen Houthi Missile Attack: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published on: October 21, 2026 at 12:38 pm
ஷப்வா, அக்.21, 2026: ஏமன் நாட்டின் ஷப்வா மாகாணத்தில் உள்ள அரசு பாதுகாப்புப் படையினரின் பயிற்சி முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுப் படையினரின் பயிற்சி நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ பொறுப்பேற்றுள்ளார். அந்தப் பயிற்சி முகாம் சவுதி படையினரால் இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தாக்குதலில் காணாமல் போன 14 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி நிலவுகிறது. அண்மைக்காலத் தாக்குதல்கள் அப்பகுதியில் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைவதற்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க : உக்ரைனுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை கிடைக்கவில்லை.. ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com