Sanju Samson: ரஜினியின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர் 2’ படம் பார்க்க தியேட்டர் முழுவதையும் புக் செய்துள்ளார்.
Sanju Samson: ரஜினியின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர் 2’ படம் பார்க்க தியேட்டர் முழுவதையும் புக் செய்துள்ளார்.

Published on: October 21, 2026 at 12:01 pm
சென்னை, அக்.21, 2026: இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக பெங்களூருவில் உள்ள திரையரங்கம் ஒன்றை முழுவதுமாக முன்பதிவு செய்துள்ளார். தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணியினருடன் இணைந்து படம் பார்ப்பதற்காக அவர் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன், அவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்கு எப்போதும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ‘ஜெயிலர் 2’ வெளியான நாளில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டியிருந்ததால், அவரால் முதல் நாளில் படத்தைப் பார்க்க முடியவில்லை.
இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், ரஜினிகாந்தின் படங்களைப் பார்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவரது அடுத்த படத்திற்காக எப்போதும் காத்திருப்பதாகவும் கூறினார். தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், ரஜினிகாந்தைத் திரையில் காண மிகவும் ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்திய அணியில் தமிழ் தெரிந்த வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களும் இந்தத் தனிப்பட்ட திரையிடலில் கலந்துகொண்டதாக அவர் கூறினார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். சஞ்சு சாம்சனின் இந்தச் செயல் ரஜினி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : சஹானா, ஜே.டி. மதனுக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com