Asian Para Games 2026 : ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வரலாற்று வெற்றிப்பெற்ற சஹானா, ஜே.டி. மதனுக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
Asian Para Games 2026 : ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வரலாற்று வெற்றிப்பெற்ற சஹானா, ஜே.டி. மதனுக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Published on: October 21, 2026 at 11:05 am
சென்னை, அக்.21, 2026: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் பேபி சஹானா ரவி மற்றும் ஜெஹான் டொரப் மதன் ஆகியோருக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிர் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் பேபி சஹானா ரவி வெண்கலப் பதக்கம் வென்றார். இதற்காக அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆடவர் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் ஜெஹான் டொரப் மதன் வெண்கலப் பதக்கம் வென்றார். இவருக்கும் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு வீரர்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
சஹானா மற்றும் மதனின் சாதனைகள் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் சாதிக்கும் பாரா விளையாட்டு வீரர்களின் வெற்றிகள், இளம் தலைமுறையினருக்கு விளையாட்டுத் துறையில் சாதிக்க ஊக்கமளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு.. தமிழக அரசைச் சாடிய மு.க.ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com