தமிழக அரசின் கடன் குறைவு சாதனையா? தவெக அரசுக்கு திமுக கேள்வி

TN’s ₹48,000 Crore Borrowing : நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.48,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டியுள்ளார்.

Published on: October 21, 2026 at 11:14 am

சென்னை, அக்.21, 2026: தமிழகத்தில் 2026-27 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், மாநில அரசு பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் குறைந்துள்ளது. இதனை நிதி நிர்வாக முன்னேற்றமாகக் கூறும் தவெக அரசின் நிலைப்பாட்டை திமுக மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

கடன் குறைந்ததற்கான காரணங்களை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், வளர்ச்சித் திட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதாலும், ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்படாததாலும் கடன் தேவை குறைந்திருக்கலாம் எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவினங்களின் விவரங்களையும் வெளியிடக் கோரியுள்ளார்.

கடந்த 2025-26 நிதியாண்டில் மூலதனச் செலவினங்களுக்காக ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட தங்கம் தென்னரசு, புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக தவெக அரசு இதுவரை செலவிட்ட தொகை எவ்வளவு என்றும், முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கான நிலுவைத் தொகை எவ்வளவு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.48,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த கடன் பெறுவதை மட்டும் சாதனையாகக் காட்டாமல், மூலதனச் செலவுகள் மற்றும் நிலுவைத் தொகைகள் குறித்த முழுமையான கணக்குகளை அரசு வெளியிட வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.5 லட்சம் FD முதலீடு.. மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு வட்டி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com