Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம் சர்ச்சைக்கு உள்ள நிலையில் இரண்டு நிர்வாகிகள் ராஜினமா செய்துள்ளார்கள்.
Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம் சர்ச்சைக்கு உள்ள நிலையில் இரண்டு நிர்வாகிகள் ராஜினமா செய்துள்ளார்கள்.

Published on: June 28, 2026 at 2:05 pm
லக்னோ, ஜூன் 28 2026; அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக புதிய பரபரப்பு நிலை உருவாகியுள்ளது. பக்தர்களிடமிருந்து வந்த நன்கொடைகளில் ரூ.80 லட்சம் கையாடல் செய்ததாக எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர்களான சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ராஜினாமா செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அறக்கட்டளை “பக்தர்களின் நன்கொடைகளும் மதிப்புமிக்க பொருட்களும் பாதுகாப்பாக உள்ளன” என உறுதியளித்துள்ளது. மேலும், நியாயமான விசாரணை நடைபெறும் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ராமர் கோயில் நன்கொடை விவகாரம், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை பாதித்துள்ளது. கோயிலுக்கான நன்கொடைகள் வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூக வட்டாரங்களில் வலுப்பெற்றுள்ளது. அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பது, இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளதற்கான சான்றாகக் கருதப்படுகிறது.
பக்தர்கள், “நன்கொடைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது” எனக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் வட்டாரங்களும், சமூக அமைப்புகளும் இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்துகின்றன. அடுத்தடுத்த நாட்களில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் அரசியல், சமூக ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க; அயோத்தி ராமர் கோவிலில் ரூ.200 கோடி முறைகேடு உண்மையா? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com