தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்கெடுப்பை தொடங்குக.. மருத்துவர் அன்புமணி

Anbumani Ramadoss : “தமிழ்நாட்டிலும் சமூகநீதி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: May 28, 2026 at 2:33 pm

Updated on: May 28, 2026 at 2:37 pm

சென்னை, மே 28, 2026 : பா..ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “கர்நாடகத்தில் கடந்த ஆண்டு இரண்டாம் முறையாக நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் அடங்கிய அறிக்கை அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. சமூகநீதியை காக்கும் நோக்குடன், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இரண்டாம் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கர்நாடக அரசு நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டிலும் இதே முறையில் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும். இதற்குத் தேவையான மனிதவளம் தமிழ்நாட்டில் உள்ளது. கர்நாடகத்தில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்த ரூ.635 கோடி செலவான நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.700 கோடியில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க இயலும். நடப்பாண்டில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் சமூகநீதி சர்வேக்காக ரூ.700 கோடியை ஒதுக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை; சட்டப்படியும் இதற்கு எந்தத் தடையும் இல்லை” எனவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் நேற்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதை எதிர்ப்பதற்காக சமூகநீதியின் எதிரிகள் முன்வைத்த காரணங்கள் அப்படியே இருப்பதால், எந்த நேரமும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படலாம். அதை எதிர்கொள்ளவும் சமூகநீதி சர்வே அவசியம்.

இவை அனைத்துக்கும் மேலாக, ’’ ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கீட்டு சர்வே மேற்கொள்ளப்படும்” என்பது தான் ஆளும் த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதி என்பதால் அதையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இத்தகைய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டின் டி.ஜி.பி நியமனம்.. ராமதாஸ் பரபரப்பு அறிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com