Abhirami fitness journey : 35 வயதுக்கு மேல் பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகரிக்கும்” என நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
Abhirami fitness journey : 35 வயதுக்கு மேல் பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகரிக்கும்” என நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.

Published on: May 28, 2026 at 2:32 pm
சென்னை, மே 28, 2026: “இளமையில் உடலை கவனித்தால், முதிர்வில் உடல் நம்மை கவனிக்கும்” என நடிகை அபிராமி கூறியுள்ளார். மேலும், “பணம், வெற்றி எதுவும் ஆரோக்கியத்தை மாற்ற முடியாது” என்ற யதார்த்த உண்மையையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
‘பிளாஸ்ட்’ படத்தில் நடிக்கும் நடிகை அபிராமி தனது உடல் எடை குறைப்பின் காரணத்தை வெளிப்படையாக விளக்கி, “ஆரோக்கியம் என்பது பணத்தால் வாங்க முடியாத ஒன்று” என்று கூறியுள்ளார். பிளாஸ்ட் திரைப்படத்தில், அபிராமி மிகவும் மெலிந்த தோற்றத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில், அவரது புதிய தோற்றம் குறித்து பலரும் பாராட்டினாலும், சிலர் எதிர்மறை கருத்துக்களையும் தெரிவித்தனர்
இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ள அபிராமி, “எதை செய்தாலும் எதிர்மறை கருத்துக்கள் வரும். அனைவரையும் மகிழ்விக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். அபிராமியின் இந்தப் பதில் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது; மேலும், பெண்களுக்கு 35 வயது முதல் 40 வயதுக்கு மேல் கால்சியம் குறைபாடு ஏற்படும். இதனால், தசை வலிமை குறைவு, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படலாம். இளமையில் உடலை கவனித்தால், முதிர்வில் உடல் நம்மை கவனிக்கும். பணம், வெற்றி எதுவும் ஆரோக்கியத்தை மாற்ற முடியாது” எனக் கூறியுள்ளார்.
அபிராமியின் இந்தக் கருத்துக்கள் பல பெண்களை ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கோடைகாலத்தில், ‘பிங்க் கண்’ பாதிப்பு.. தவிர்ப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com