I S INBADURAI : “எம்.ஜி.ஆர் மரபை முடிவுக்கு கொண்டு வர விஜய் நினைக்கிறார்” என அ.தி.மு.க.வின் மாநிலங்களவை எம்.பி இன்பதுரை தெரிவித்துள்ளார்.
I S INBADURAI : “எம்.ஜி.ஆர் மரபை முடிவுக்கு கொண்டு வர விஜய் நினைக்கிறார்” என அ.தி.மு.க.வின் மாநிலங்களவை எம்.பி இன்பதுரை தெரிவித்துள்ளார்.

Published on: May 28, 2026 at 2:28 pm
Updated on: May 28, 2026 at 2:36 pm
சென்னை, மே 28, 2026: அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி இன்பதுரை, “எம்.ஜி.ஆர் மரபை முடிவுக்கு கொண்டு வர விஜய் நினைக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஐ.எஸ் இன்பதுரை, “தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் எம்ஜிஆர் மரபுக்கும் – விஜய் மரபுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் ஆகும்! அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனமாக்கி எம்.ஜி.ஆர் மரபை (MGR Legacy) முடிவுக்கு கொண்டு வர முதல்வர் விஜய் முயல்கிறார். ஆனாலும் இறுதியில் எம்ஜிஆரே வெல்வார்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் எம்ஜிஆர் மரபுக்கும் – விஜய் மரபுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் ஆகும்! அதிமுக எம்எல்ஏ க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனமாக்கி MGR Legacy -ஐ முடிவுக்கு கொண்டு வர முதல்வர் விஜய் முயல்கிறார். ஆனாலும் இறுதியில் எம்ஜிஆரே வெல்வார்!@AIADMKOfficial…
— I.S.INBADURAI (@IInbadurai) May 28, 2026
த.வெ.க.வில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இணைந்தது குதிரை பேரம் எனவும் ஐ.எஸ் இன்பதுரை குற்றஞ்சாட்டி இருந்தார்.
இது குறித்து அவர், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுணாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை.இது 100 சதவீத குதிரை பேரம்’” எனத் தெரிவித்து இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : Exclusive: விஜய்-அமித் ஷா சந்திப்பு இல்லை.. ஏன்? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com