Exclusive: விஜய்-அமித் ஷா சந்திப்பு இல்லை.. ஏன்? பரபரப்பு தகவல்கள்!

Vijay–Amit Shah Meet Cancelled : டெல்லி சென்றுள்ள விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. அதேபோல், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன் கார்கே என அவர் யாரையும் சந்திக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Published on: May 28, 2026 at 1:34 pm

புதுடெல்லி, மே 28, 2026 : தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், தனது முதல் பயணமாக டெல்லி சென்ற விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. அதேபோல் காங்கிரஸ் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்ற இதர தலைவர்களையும் அவர் சந்திக்கவில்லை.

பிரதமரை சந்தித்த விஜய்

டெல்லி சென்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நடந்தது. அப்போது, தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமரின் கைகளில் கொடுத்தார். மேலும், அவர் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் கடந்த காலங்களில் தீர்க்கப்படாத பிரச்னைகள் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணம் தொடர்பான செய்திகள், ஊடகங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் மாலை 6.45 மணிக்கு சந்திப்பதாக இருந்தது. ஆனால், இந்தச் சந்திப்பு ரத்தான நிலையில், அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அமித் ஷா உடன் சந்திப்பு நடைபெறவில்லை.

அரசின் சில நடைமுறைகளின் படி உள்துறை அமைச்சர் அமித் ஷா, விஜய்யை சந்திக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் விஜய் தங்கிய போதும் அவர் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை.

இதுவும் கூட்டணியில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னணியில் பா.ஜ.க.வின் அழுத்தம் இருப்பதாகவும் பரவலாக பேசப்படுகிறது.

மீண்டும் டெல்லி பயணம்?

இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் விஜய் மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்வார் என்றும் அப்போது பிரதமர், உள்துறை அமைச்சர் என பயணத் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : முதலமைச்சர் விஜய்-பிரதமர் மோடி சந்திப்பு… முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com