New Karnataka CM : கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே சிவக்குமார் தேர்வாகியுள்ளார் என அமைச்சர் ஹெச்.கே பாட்டீல் கூறினார்.
New Karnataka CM : கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே சிவக்குமார் தேர்வாகியுள்ளார் என அமைச்சர் ஹெச்.கே பாட்டீல் கூறினார்.

Published on: May 28, 2026 at 1:46 pm
Updated on: May 28, 2026 at 1:48 pm
பெங்களூரு, மே 28, 2026; சித்த ராமையா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார்; புதிய முதலமைச்சராக டி.கே சிவக்குமார் தேர்வாகியுள்ளார் என மாநில அமைச்சர் ஹெச்.டி பாட்டீல் கூறியுள்ளார்.
இது குறித்து பி.டி.ஐ செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “கர்நாடக அரசியலில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் எச்.கே. படில் உறுதிப்படுத்தியதாவது, டி.கே. சிவக்குமார் கர்நாடகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
HD பாட்டீல் பேட்டி
VIDEO | Bengaluru: Minister HK Patil confirms that DK Shivakumar will be the new CM of Karnataka.
— Press Trust of India (@PTI_News) May 28, 2026
He says, “Chief Minister Siddaramaiah, said that discussions were held at the high-command level and that the high command had suggested his resignation, which he readily and… pic.twitter.com/Zq0tiuOjCt
(நன்றி: பி.டி.ஐ)
முதலமைச்சர் சித்தராமையா டெல்லி மேலிடம் நடத்திய ஆலோசனைகளில், ராஜினாமாவை பரிந்துரைத்ததாகவும், அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி மேலிடம் டி.கே. சிவக்குமாரை அடுத்த முதலமைச்சராக முன்மொழிந்ததாகவும், அதையும் அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
எந்த விதமான பிளவு, எதிர்ப்பு, வேறுபாடுகளும் இல்லாமல், இது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு எனவும் சித்தராமையா தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சித்தராமையா ராஜ்யசபாவுக்கு செல்லவில்லை; இன்று மதியம் 3 மணிக்கு ராஜ் பவனுக்கு செல்லவுள்ளார்” என்றும் பாட்டீல் கூறினார்.
இந்த அறிவிப்பின் மூலம், கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
இதையும் படிங்க : சித்த ராமையா இன்று ராஜினாமா? புதிய முதலமைச்சர் யார்?.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com