சூர்யாவை கைவிடாத கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

Karuppu hits ₹258 cr mark : கருப்பு படத்தில் லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

Published on: May 28, 2026 at 2:42 pm

Updated on: May 28, 2026 at 3:06 pm

சென்னை, மே 28, 2026: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் 13-ஆம் நாளில் ரூ.258.85 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.163.20 கோடி நெட் வசூல், வெளிநாடுகளில் ரூ.70 கோடி வசூலுடன், உலகளாவிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

அதாவது இந்தியாவில் மட்டும் ரூ.163.20 கோடி நிகர வசூலை பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான வெற்றி தமிழ் ரசிகர்களால் சாத்தியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தெலுங்கு ஆடியன்ஸ் இருக்கின்றனர். மேலும், படத்தை பொறுத்தமட்டில் மாலை காட்சிகளில் அதிகம் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

கருப்பு திரைப்படம் புராணக் கூறுகளுடன் சமூக கருத்துகளை இணைத்த புனைவு-ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. படத்தில், வழக்கறிஞர் சரவணன், கருப்பசாமியின் மனித அவதாரம் என சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் வருகிறார். ஆர்.ஜே பாலாஜி படத்தை இயக்கியதுடன், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், ‘கருப்பு’ படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய கம்பேக் ஹிட் ஆகும். 13 நாட்களில் ரூ.258.85 கோடி வசூலுடன், தமிழ் சினிமாவின் பெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியை நெருங்கும் திரிஷ்யம்-3.. சாதித்த மோகன் லால்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com