Samantha : சமந்தா நடிப்பில் மா இன்டி பங்காரம் என்ற படம் உருவாகியுள்ளது; இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samantha : சமந்தா நடிப்பில் மா இன்டி பங்காரம் என்ற படம் உருவாகியுள்ளது; இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 28, 2026 at 10:49 am
ஹைதராபாத், மே 28, 2026: சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள மா இன்டி பங்காரம் என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இந்த பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி சமந்தாவுக்கு மலர் கொத்து வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஒரு ரசிகர் பாதுகாப்பை மீறி சமந்தாவிடம் சென்றார். அப்போது, அவர் மலர் கொத்து வழங்கி, மண்டியிட்டு புகைப்படம் எடுத்தார். சமந்தா சிரித்தும், சிவந்த முகத்துடன் அதை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, பாதுகாப்புக்கு நின்றிருந்த பவுன்சர்கள் அவரை தடுக்க முயன்றபோது, சமந்தா “அவரை விடுங்கள்” என்று கூறி, ரசிகருடன் செல்ஃபி எடுத்தார். மா இன்டி பங்காரம் படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார்; இந்தப் படத்தில் சமந்தா, திகந்த், குல்ஷன் தேவையா, ஸ்ரீ முகி, கவுதமி, ஆனந்த், லட்சுமி, ஸ்ரீனிவாஸ் கவிரெ, மஞ்சுஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் காட்சியில், ஒரு பெண் தனது கணவருடன் கிராமத்துக்கு திரும்பி குடும்பத்துடன் வாழ சம்மதிப்பது போல் உள்ளது.
இதையும் படிங்க : 1,000 அடி பள்ளத்தில் விழுந்த சொகுசு கார்.. பிரபல நடிகர் மரணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com