Delhi Heat Wave: டெல்லியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Delhi Heat Wave: டெல்லியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Published on: May 28, 2026 at 10:46 am
புதுடெல்லி, மே 28, 2026: டெல்லியின் சில பகுதிகளில் வெப்ப அலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி), டெல்லியின் சில பகுதிகளில் இன்று வெப்ப அலை நிலவக்கூடும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கு அதிகபட்ச வெப்பநிலை 43 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹரியானா, சண்டிகர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளிலும் பகல் முழுவதும் கடுமையான வெப்ப அலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற மாநிலங்களில் எப்படி?
இதுமட்டுமின்றி, சத்தீஸ்கர், கடலோர ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, கங்கை மேற்கு வங்கம், கொங்கன் மற்றும் கோவா, ஒடிசா, சௌராஷ்டிரா, கட்ச், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளில் இன்று இரவு வெப்பமான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், பீகார், உள் கர்நாடகா, திரிபுரா, துணை இமயமலை மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க : சித்த ராமையா இன்று ராஜினாமா? புதிய முதலமைச்சர் யார்?.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com