பெங்களூரு, மே 28, 2026: கர்நாடக மாநிலத்தில் அரசியல் பரபரப்பு உச்சத்தில் உள்ளது. மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா இன்று (வியாழக்கிழமை) காலை தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் காலை ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் மதியம் ஆளுநரிடம் ராஜினாமா அளிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் இடத்தை துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஏற்க வாய்ப்பு அதிகம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சித்த ராமையா ராஜினாமா
இன்று காலை 9 மணிக்கு சித்தராமையா தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உடன் காலை உணவு கூட்டம் நடத்துகிறார்.
தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்குப் பிறகு ஆளுநர் தாவர்சந்த் கெஹ்லோட் அவர்களிடம் ராஜினாமா அளிக்க சித்த ராமையா முடிவு செய்துள்ளார்.
புதிய முதல்வர் யார்?
இந்நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பதவியேற்கும் வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.
பின்னணி என்ன?
2023 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சித்த ராமையா- டி.கே. சிவக்குமார் இடையே “2.5 வருடங்கள் – 2.5 வருடங்கள்” என்ற அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் டெல்லி மேலிடம் சித்த ராமையாவுக்கு ராஜ்யசபா இடம் மற்றும் தேசிய அளவிலான பங்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் மாநிலத்தில் ஆங்காங்கே தற்போதே டி.கே. சிவக்குமார் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க : த.வெ.க.வில் இணையும் இசக்கி சுப்பையா? அடுத்த விக்கெட் காலி? பரபரக்கும் தமிழக அரசியல்
CM Vijay Prays at Kollur Temple: முதலமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடு நடத்தினார்….
TVK : இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காதது ஏன்?…
Shivakumar on Mekedatu: தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்….
Karnataka New CM: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார்….
New Karnataka CM : கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே சிவக்குமார் தேர்வாகியுள்ளார் என அமைச்சர் ஹெச்.கே பாட்டீல் கூறினார்….
Siddaramaiah set to resign : கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா இன்று (மே 28, 2026) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்ற தவவல்கள் வெளியாகியுள்ளன….