717 TASMAC Shops Shut Down : தமிழகத்தில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
717 TASMAC Shops Shut Down : தமிழகத்தில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Published on: May 12, 2026 at 3:12 pm
சென்னை, மே 12 2026: தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மாதந்தோறும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுவால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும், போதைப்பொருள் மற்றும் மது பழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 276 டாஸ்மாக் கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து, ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் செயல்பட்டு வரும் 255 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 717 கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள், பிற டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றுப்பணியிடங்களில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் பார்களில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க ; இரண்டாக பிரிந்த அ.தி.மு.க? சட்டமன்ற குழு தலைவர் யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com