இரண்டாக பிரிந்த அ.தி.மு.க? சட்டமன்ற குழு தலைவர் யார்?

AIADMK Leaderhip Row: அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.

Published on: May 11, 2026 at 9:35 pm

சென்னை, மே 11, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், அதிமுகவில் தலைமைப் போட்டி தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக செயல்பட வேண்டும் என 17 எம்எல்ஏக்கள் மட்டுமே பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.

இதற்கிடையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான குழுவில் அதிக எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், மீதமுள்ள 30 பேரின் நிலைப்பாடு தெளிவாகவில்லை. இதனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இன்று (மே 11, 2026) காலை சட்டமன்றத்துக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவும், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான குழுவும் தனித்தனியாக வந்தனர். மேலும், இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் இருந்தது கவனிக்கப்பட்டது.

இந்நிலையில், பழனிசாமிக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு உறுதியாக இருந்தால், அவர் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். மேலும், வருகிற நாட்களில் அதிமுகவில் அதிகாரப் போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சபாநாயகர் தேர்தல்: ஜே.சி.டி. பிரபாகர் வேட்புமனு தாக்கல்.. யார் இவர்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com