Asian Boxing Championships 2026 : ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Asian Boxing Championships 2026 : ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Published on: May 12, 2026 at 2:52 pm
தாஷ்கண்ட், மே 12 2026: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்று வரும் ஆசிய 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தாஷ்கண்ட் நகரில் நேற்று நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில் இந்தியாவின் 8 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். அதே நேரத்தில், அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் 4 வீராங்கனைகள் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. இரு பிரிவுகளுக்குமான இறுதிப்போட்டிகள் வருகிற மே 15-ஆம் தேதி நடைபெறுகின்றன.
இதற்கிடையில், 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இந்தியாவின் 6 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மேலும் 7 வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிலும் இந்தியாவின் 9 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: எங்க போட்டாலும் அடிக்கிரான் டா.. கவாஸ்கர் பரிந்துரை.. பவுலர்கள் நிம்மதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com