5 நாள் அரசுமுறை பயணம்.. ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி.. முழுவிவரம்

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 15 முதல் 5 நாள் அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Published on: May 12, 2026 at 1:33 pm

புதுடெல்லி, மே 12 2026; பிரதமர் நரேந்திர மோடி வருகிற வெள்ளிக்கிழமை முதல் 6 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பயணம் மூலம் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் கூட்டாண்மை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் நிறைவு செய்யப்பட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள், எரிசக்தி ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நெதர்லாந்து சென்று அந்நாட்டு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்ஸிமா ஆகியோரை சந்திக்கிறார். மேலும் பிரதமர் ராப் ஜெட்டன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில்நுட்பம், புதுமை, பசுமை ஹைட்ரஜன், அரைக்கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் நீர்வள மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியா-நெதர்லாந்து உறவுகள் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தின் 3-வது கட்டமாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை கோதன்பர்க் நகருக்குச் சென்று உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் ஐரோப்பிய தொழில்துறை வட்ட மேசை மாநாட்டில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடன் பிரதமர் மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் பங்கேற்க உள்ளனர்.

பயணத்தின் 4-வது கட்டமாக பிரதமர் மோடி திங்கட்கிழமை நார்வே சென்று 3-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அப்போது நார்வே மன்னர் ஹரால்ட் V, ராணி சோன்ஜா ஆகியோரை சந்திப்பதுடன், பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் உடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் இந்தியா-நார்வே தொழில் மற்றும் ஆராய்ச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இறுதிக்கட்டமாக பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இத்தாலி செல்கிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் இத்தாலி சென்றிருந்தார். இந்த முறை அவர் அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பயணம், 2025-2029 கூட்டு மூலோபாய செயல் திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் இந்தியா-இத்தாலி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com