சென்னை, மே 30, 2026: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக த.வெ.க அரசு பொது மக்களுக்கான பதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் அவ்வப்போது ஆங்காங்கே கொலைகள் நடைபெறுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கூட திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில், மது போதையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டிற்குள் புகுந்து ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது கொடுமை. கொலையாளிகள் மகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, தந்தையின் கொடூர கொலையை நேரில் பார்க்க வைத்தனர். மேலும் அவரது மனைவி மற்றும் மகனும் இத்தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கெல்லம் காரணம் போதைப்பொருட்கள் என்றாலும் காவல்துறையினரின் மீதும், சட்டம் ஒழுங்கின் மீதும், தண்டனை மீதும் பயம் இல்லாத நிலையை வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக புதிதாக ஆட்சி செய்யும் தமிழக அரசின் மீது குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு புயம் இல்லாததும் கூட. எனவே தமிழக அரசு கொலை செய்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து, கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி அதிக பட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே தமிழக அரசு மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு, கொலைகள் நடைபெறாமல் இருக்கும் வகையில், மக்களுக்கான பாதுகாப்பில் உறுதியைக் கொடுக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : செங்கல் சூளை மேஸ்திரியை சுற்றி வளைத்த 6 பேர்… திருவாரூரில் நடந்த கொடூரத்தின் பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்