Tiruvarur murder news: திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் சூளை மேஸ்திரி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tiruvarur murder news: திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் சூளை மேஸ்திரி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 30, 2026 at 12:31 pm
திருவாரூர், மே 30 2026: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த செங்கல் சூளை மேஸ்திரி திருமுருகன். இவரது மனைவி மனைவி சுதா, மகன் சுமன், மகள் பியாஸ். இன்று அதிகாலை திருமுருகன் வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தாய் மற்றும் மகளின் கண்முன்னே திருமுருகனை சரமாரியாக வெட்டியது. குடும்பத்தின் அந்த கும்பலை தடுக்க முயன்றநிலையில், அவர்களையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
தாய் மற்று மகள் கண்முன்னே நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான முழு காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது.. 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com