Actor Ajith Kumar’s mother passed away: நடிகர் அஜித் குமாரின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்.
Actor Ajith Kumar’s mother passed away: நடிகர் அஜித் குமாரின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்.

Published on: May 30, 2026 at 12:14 pm
சென்னை, மே 30 2026: நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது நடிகர் அஜித் துபாயில் இருந்து சென்னை வருகிறார்.
மோகினி, மறைந்த பி.எஸ். மணி அவர்களின் மனைவியும், நடிகர் அஜித் குமார், அனுப் குமார் மற்றும் அனில் குமார் ஆகியோரின் தாயாரும் ஆவார். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாக கொண்ட அஜித் குமாரின் குடும்பம் நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்தது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
அஜித் குமாரின் தந்தை கடந்த 2023-ம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் காலமானார்.
இதையும் படிங்க : ஜார்ஜ் குட்டி இனி கேபிள் ஆபரேட்டர் அல்ல.. பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பும் திரிஷ்யம்-3
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com