Drishyam 3 crosses ₹183 cr : நடிகர் மோகன் லாலின் திரிஷ்யம்-3 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படம் இதுவரை ரூ.183 கோடி வசூலித்துள்ளது.
Drishyam 3 crosses ₹183 cr : நடிகர் மோகன் லாலின் திரிஷ்யம்-3 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படம் இதுவரை ரூ.183 கோடி வசூலித்துள்ளது.

Published on: May 30, 2026 at 11:48 am
திருவனந்தபுரம், மே 30, 2026: மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘திரிஷ்யம் 3’ படம் 7-ஆம் நாளில் 2.3% வளர்ச்சி பெற்று, உலகளாவிய வசூல் ₹183.08 கோடியாக உயர்ந்துள்ளது.
7-ஆம் நாள் வசூல் நிலவரம்
திரிஷ்யம்-3 திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ.183.08 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படம் இந்தியாவில் ரூ.75.30 கோடியும், வெளிநாட்டு வசூல் ரூ.95.70 கோடியாகவும் காணப்படுகிறது. இந்தப் படத்தின் மலையாளப் பதிப்பு 7ஆம் நாளில் ரூ.6.10 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ.50 லட்சமும், தமிழ் பதிப்பு ரூ.20 லட்சமுமாக காணப்படுகின்றது.
மலையாளப் பதிப்பில், மாலை மற்றும் இரவு காட்சிகளில் அதிக பார்வையாளர்கள் காணப்படுகின்றனர். இந்தப் படத்தின் கதைப்படி, ஜார்ஜ்குட்டி (மோகன் லால்) இனி கேபிள் டிவி ஆபரேட்டர் அல்ல; வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளராக மாறியுள்ளார். குடும்பம் வளர்ந்தாலும், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் பயம் இன்னும் அவரை துரத்துகிறது. அந்த வகையில், படம் சஸ்பென்ஸ் மட்டுமல்ல, மனஅழுத்தம் மற்றும் உளவியல் விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது.
இதையும் படிங்க : சூர்யாவை காப்பாற்றிய கருப்பு.. எகிறும் விஷ்வநாத் அண்ட் சன்ஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com