Vishwanath & Sons release date : சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஷ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Vishwanath & Sons release date : சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஷ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: May 29, 2026 at 8:22 pm
Updated on: May 29, 2026 at 8:24 pm
சென்னை, மே 29, 2026: சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கும் ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக,‘கருப்பு’ வெற்றியின் பின்னணியில் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் விஷ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில், உலகளாவிய திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில், சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கிடையில், ‘கருப்பு’ படம் வசூலில் வெற்றி பெற்ற நிலையில், ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் ரசிகர்கள், “சூர்யாவின் அடுத்த பெரிய மைல்கல்” என்று கொண்டாடுகின்றனர்.
இதற்கிடையில், விஷ்வநாத் அண்ட் சன்ஸ் குடும்பம் சார்ந்த உணர்ச்சி கலந்த கதை என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஸாரி தனுஷ் & விக்னேஷ் ராஜா.. ஓ.டி.டி.யில் கர.. ரசிகர் மன்னிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com