Double Occupancy launch Event : ‘டபுள் ஆக்யுபன்சி’ இசை வெளியீட்டு விழாவில் குஷ்பு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரது மகள் கண்ணீர் விட்டார்.
Double Occupancy launch Event : ‘டபுள் ஆக்யுபன்சி’ இசை வெளியீட்டு விழாவில் குஷ்பு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரது மகள் கண்ணீர் விட்டார்.

Published on: May 30, 2026 at 11:35 am
சென்னை, மே 30, 2026: ‘டபுள் ஆக்யுபன்சி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு உணர்ச்சிவசப்பட்ட உரையால் மகள் அனந்திதா சுந்தர் கண்ணீர் மல்கினார். இந்த விழாவில், குஷ்பு, மகள் அனந்திதா மற்றும் நடிகர் சந்தோஷ் இடையேயான நெருக்கமான பந்தத்தை நினைவுகூர்ந்தார்.
இது குறித்து பேசிய குஷ்பு, “சந்தோஷ் எங்கள் குடும்பத்தில் மகனாகவே இருக்கிறார். சிறுவயதில் அனந்திதாவுடன் சண்டையிட்டாலும், பின்னர் மிக நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள்” என்று கூறினார். மேலும், அனந்திதா லண்டனில் படித்தபோது கூட, சந்தோஷுடன் சினிமா கதைகள் குறித்து தொடர்ந்து பேசினார் என குஷ்பு பகிர்ந்தார்.
இரட்டையர்கள்..
தொடர்ந்து, “லண்டனில் படிப்பை முடித்து வந்தபின், அனந்திதா தனது குடும்பத்திடம் “சந்தோஷை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க வேண்டும்” என்று உறுதியாக தெரிவித்தார் என்றார். மேலும், “சந்தோஷ் தும்மினாலும் அனந்திதா கவலைப்படுவாள். அவர்கள் முந்தைய பிறவியில் இரட்டையர்கள் போல இருக்கலாம்” என்று குஷ்பு உணர்ச்சியுடன் கூறினார்.
இந்நிலையில், குஷ்புவின் உரையை கேட்டு, அனந்திதா மேடையில் கண்ணீர் மல்கினார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்கள் “அம்மா-மகள் பந்தம் அற்புதம்” என்று பாராட்டினர். அனந்திதா முன்பு மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், தற்போது கிரியேட்டிவ் புரொட்யூசர் ஆக தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்தப் படத்தை அஷ்வின் கந்தசாமி இயக்கியுள்ளார். ரசிகர்கள், இந்த படம் அனந்திதாவின் சினிமா பயணத்தில் புதிய தொடக்கம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க : விஜயை வேலை செய்ய விடுங்கள்.. தீனா அண்ணன் சுரேஷ் கோபி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com