விஜயை வேலை செய்ய விடுங்கள்.. தீனா அண்ணன் சுரேஷ் கோபி!

Suresh Gopi on TVK: “விஜய்யை வேலை செய்ய விடுங்கள்; அவர் தன்னை நிரூபிக்கட்டும்” என மலையாள நடிகரும், பா.ஜ.க எம்.பி.யுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

Published on: May 28, 2026 at 11:56 am

திருவனந்தபுரம், மே 28, 2026: மலையாளம்- தமிழ் நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி எம்.பி, சமீபத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் சுரேஷ் கோபி, “விஜயை வேலை செய்ய விடுங்கள், அவர் தன்னை நிரூபிக்கட்டும்” எனக் கூறியுள்ளார். மேலும், தற்போது விமர்சனம் செய்வது சரியல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

என்ன பேசினார் சுரேஷ் கோபி?

பா.ஜ.க எம்.பி.யும் நடிகருமான சுரேஷ் கோபி, “முதலமைச்சர் விஜயை வேலை செய்ய விடுங்கள். மக்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அவர் நல்ல வேலை செய்யட்டும்.” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கேரளத்தில் தொடங்கினாலும் பிரச்சினை இல்லை எனவம் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பேசிய சுரேஷ் கோபி, “அவர் (விஜய்) எங்கு வேண்டுமானாலும் தொடங்கட்டும். உலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை செய்யட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் வெற்றி

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் மே 10, 2026 ஆம் தேதி பதவியேற்றார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைத்தது.

விஜய், உள்துறை, காவல், நகராட்சி, நீர் வழங்கல், பெண்கள் நலன் உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். நடிகராக சுரேஷ் கோபி, தீனா படத்தில் அஜித் குமார் அண்ணனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘இது காதலின் தாலி’.. ராஷ்மிகா மனதை கவர்ந்த விஜய் தேவரகொண்டா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com